ஜெயங்கொண்டம்: கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
கஞ்சா விற்பனை செய்த செந்தில்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கீழக்குடியிருப்பு விருத்தாசலம் ரோட்டிற்கு அருகே தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 3 இளைஞர்கள் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜெயங்கொண்டம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில், கீழத்தெருவை 19 வயது சிறுவன் மற்றும் உடையார்பாளையம் கைகளநாட்டார் தெருவைச் சேர்ந்த சின்னவளையம் தெற்குத் தெருவை சேர்ந்த 19 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 18 ஆயிரத்து 180 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்ற நீதிபதி சுப்பிரமணியன் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மூன்று பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu