/* */

அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய  வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு
X

ஜெயங்கொண்டம் அருகே  தேர்தல் நடத்தை விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள சுவவெராட்டிகள்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பதாம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வினோத் கண்ணன், ராஜாராம் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் சின்னங்களை விளம்பரம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயராஜ் உடனடியாக சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

மேலும் இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்பேரில் நாயகனைப்பிரியால் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Oct 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!