ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து, இரண்டு வீடுகளில் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து, இரண்டு வீடுகளில் திருட்டு
X

ஜெயங்கொண்டம் அருகே திருட்டு நடந்த வீடு.

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்தி செல்வராஜ்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதேபோல் 6 வது குறுக்கு தெருவை சேர்ந்த பவுனம்மாள் தனசேகர் தம்பதியர்கள், வீட்டைபூட்டி விட்டு சென்னையில் உள்ள பவுனம்மாள் அக்கா மகன் திருமணத்திற்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், பூட்டி இருந்த 2 வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதில் 6வது குறுக்குத் தெருவில் உள்ள பவுனம்மாள் வீட்டில் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் இரண்டு மோதிரம் சேர்ந்து 2 கிராம் நகை , ஏடிஎம் கார்டு, வீடு மற்றும் நிலத்து பத்திரம் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சக்தி செல்வராஜ் என்பவர் வீட்டில் ரூபாய் 4 ஆயிரம் பணம் 2 கிராம் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து, அரியலூர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!