ஜெயங்கொண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை
உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இரா.வாழக்குட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாழ் முனிஸ்வரன் காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மற்றும் ஆடி மாதங்களில் உண்டியலில் உள்ள காணிக்கை தொகை கோயில் நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு கோயிலுக்கு தேவையான வேலைப்பாடுகள் மற்றும் முக்கிய காரணங்களில் செலவழிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் தை மாதம் எடுக்க வேண்டிய தொகை காணிக்கை தொகை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. ஒவ்வொரு ஆடி மாதம் தை மாதங்களில் எடுக்கப்படும் தொகை சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோயில் உண்டியல் தொகை எடுக்க உள்ள நிலையில் மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிர்ச்சி அளித்ததாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி சாமிநாதன் கூறுகையில் தினமும் மாலை 6 மணியளவில் கோயிலில் மின்விளக்குகள் எரிய வைத்து விட்டு காலையில் 6 மணியளவில் கோயில் விளக்குகளை அணைத்து வைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் கோவில் அருகில் உள்ள கொட்டகையில் படுத்து உறங்குவதாகவும் இரவு 12 மணி அளவில் கோயில் உண்டியல்களை சரி செய்து பார்த்து வந்த நிலையில் விடியற்காலை பொழுதில் யாரோ மர்ம நபர்கள் அருகில் இருந்த சூலத்தை பிடுங்கி அதன் மூலம் உண்டியலை உடைத்து அதில் உள்ள காணிக்கை தொகை சுமார் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்று விட்டனர் என்றார். திருட்டு சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu