அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர் கைவரிசை

அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர் கைவரிசை
X

அரியலூர் அருகே ஜவுளி கடைக்குள் புகுந்த மர்ம நபர் கொள்ளையடிக்கும் சிசிடிவி கேமிரா பதிவு

அரியலூர் அருகே ஜவுளி கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்சுருட்டி பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில், பாலசுப்பிரமணியனின் மகனான மணிகண்டன் என்பவர் கடையை திறப்பதற்கு சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 10,000 ரூபாய் பணம், வெள்ளி முலாம் பூசப்பட்ட இரண்டு குத்துவிளக்குகள், ஒரு அடி உயர பிள்ளையார் சிலை போன்றவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் சென்று கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், குத்து விளக்குகள், பிள்ளையார் சிலை போன்றவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த ஜவுளி கடைக்கு அருகில் இருக்கும் ஹோட்டலிலும் மர்ம நபர் 500 ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மீன்சுருட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!