டிராக்டரில் ஏர்கலப்பையுடன் போராட்டத்திற்கு சென்ற பாஜாகவினர்

டிராக்டரில் ஏர்கலப்பையுடன் போராட்டத்திற்கு சென்ற பாஜாகவினர்
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட டிராக்டரில் ஏர்கலபபையுடன் பாஜாகவினர் பேரணியாக சென்றனர்.


அணைக்குடம் கிராமத்திலிருந்து தஞ்சாவூர் உண்ணாவிரத போராட்டத்திற்கு டிராக்டரில் ஏர் கலப்பையுடன் பாஜாகவினர் சென்றனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சாவூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறம் உண்ணாவிரத போராட்டத்திற்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து டிராக்டர் மற்றும் ஏர்கலபபையுடன் பாஜாகவினர் பேரணியாக சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டருடன் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது அணைக்குடம் கிராமத்திலிருந்து மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சுமார் 30 க்கும் மேற்பட்ட டிராக்டரில் ஏர்கலபபையுடன் பாஜகவினர் மற்றும் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.

Tags

Next Story
ai in future education