முதல்வரை அவதூறாக பேசியதாக கைதான பா.ஜ.க. பிரமுகர் ஜாமீனில் விடுதலை

முதல்வரை அவதூறாக பேசியதாக கைதான பா.ஜ.க. பிரமுகர் ஜாமீனில் விடுதலை
X

ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அகோரம் போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக கைதான பா.ஜ.க. பிரமுகர் அகோரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. ஒ.பி.சி. அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக ஜெயங்கொண்டம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அகோரத்தை சீர்காழியில் கைது செய்த போலீசார் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தினர். அப்போது அகோரம் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதி, அகோரத்திற்கு 2 லட்சத்திற்கான பிணைய பத்திரத்தையும் 2 ஜாமீன்தார்கள் தலா 10 ஆயிரத்திற்கான பிணை பத்திரத்தையும் கொடுத்ததன் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!