அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள கடைகளில் வட்டார கிராம ஊராட்சி அலுவலர் அன்புச் செல்வன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.  



அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள கடைகளில் வட்டார கிராம ஊராட்சி அலுவலர் அன்புச் செல்வன் தலைமையில், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 10 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். 5 கடைகளுக்கு ரூ. 500, ரூ. 1000, ரூ. 5000 என அபராதம் விதித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை மற்றும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார கிராம ஊராட்சி அலுவலர் அன்புச் செல்வன் கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story