அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் வாழை சாகுபடி குறித்து பயிற்சி முகாம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் வாழை சாகுபடி குறித்து பயிற்சி முகாம்
X

பைல் படம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் விவசாயிகளுக்கு வாழை சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் இணைந்து வாழை சாகுபடி குறித்த பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தின 75 வது வைர விழா கொண்டாடத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமை கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவரும், விஞ்ஞானியுமான கோ.அழகுகண்ணன் தொடங்கி வைத்து பேசினார். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய வேளாண் விரிவாக்க முதன்மை விஞ்ஞானி கற்பகம் கலந்து கொண்டு வாழை ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள், பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

நோயியல் முதன்மை விஞ்ஞானி லோகநாதன், வாழையினை பாதிக்கும் நோய்கள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், மண்ணியல் முதன்மை விஞ்ஞானி ஜெயபாஸ்கர்,வாழையில் ஊட்டச்சத்துக்களின் பங்கு மற்றும் நீர் மேலாண்மைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வழைக்கான நுண்ணூட்ட சத்து கலவை மற்றும் புதுரக வாழைக் கன்றுகள் வழங்கப்பட்டது.முடிவில், கிலீடு வேளாண் மையத்தின் தோட்டக் கலை தொழில்நுட வல்லுநர் ராஜாஜோஸ்லின் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!