கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
நாயகனைப்பிரியாள் கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி தோல்வியடைந்ததால் சுமார் 50 ஆயிரம் ரொக்கம் பணம் தப்பியது.
ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி தோல்வியடைந்ததால் சுமார் 50 ஆயிரம் ரொக்கம் பணம் தப்பியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் கிராமத்தில் உள்ளது கோட்டை முனீஸ்வரன் கோவில். கோவில் பூசாரி சுப்பிரமணியன் நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலில் கட்டிட வேலை முடிந்து கோவிலில் லைட்டுகளை போட்டுவிட்டு சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவில் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து சென்று பார்த்த போது, கோவில் உள்பக்கமுள்ள உண்டியல் ஷட்டரை உடைத்து, அதில் உள்ளே உள்ள வெல்டை உடைக்க திருடர்கள் முயற்சித்துள்ளனர். வெல்டை உடைக்க முடியாத காரணத்தால் திருடர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளது தெரியவந்தது. இதனால் கோயில் உண்டியல் பணம் சுமார் 50 ஆயிரம் ரொக்கம் தப்பித்தது. கிராமத்தினர் அளித்த தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த தா.பழூர் போலீசார் தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு இதேபோல் கோயில் உண்டியலில் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கோவில் உண்டியலை மீண்டும் உடைக்க முயன்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu