ஜெயங்கொண்டத்தில் முப்படைதளபதி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

ஜெயங்கொண்டத்தில்  முப்படைதளபதி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி
X
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜெயங்கொண்டத்தில் வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூர் விமான விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் அகால மரணமடைந்ததை யொட்டி முப்படை தளபதி மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் மௌன ஊர்வலம் சென்றனர்.

அனைத்து லயன்ஸ், ரோட்டரி , வியாபாரி சங்கத்தினர்கள், பள்ளி மற்றும் நர்சிங் மாணவர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள், தன்னார்லர்வர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு முன்பாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!