அரியலூரில் முழுஊரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கும் மக்கள்
கொரோனா விபரீதம் அறிமாத பொதுமக்கள் அரியலூரில் கூட்டமாக கூடி பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதை சாதமாகமாக்கி கொண்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தால் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.
இதனையடுத்து தமிழகஅரசு திங்கள்கிழமை முதல் தளர்வுகள் அற்ற முழுஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதற்காக இன்றும் நாளையும் கடைகளை திறக்க உத்திரவிட்டுள்ளது.
இதனால் ஜெயங்கொண்டம் நகரில் இன்று தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைவீதி, காய்கறி மார்க்கெட், விருத்தாச்சலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் அதிகஅளவில் கூடினர்.
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொது மக்களிடையே சமூக இடைவெளி என்பது இல்லை. ஏற்கனவே கொரோனா தொற்றின் தாக்கம் தினந்தோறும் அதிகம் உள்ள ஜெயங்கொண்டம் நகர் மற்றும் ஊரகப்பகுதியில் மேலும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளையும் கடைகள் 9மணிவரை திறந்திருக்கும் என்ற நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி நடமாடுவது கொரோனா தொற்றை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்வது போன்றதாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தியவசிய தேவைகளுக்காக அரசு கடைகளை திறக்க உத்திரவிட்டால் இதனை பொதுமக்கள் தங்களுக்கு சாதமாக்கி கொண்டு தினந்தோறும் வீட்டிற்கு பொருள்களை வாங்கிச் செல்வதை கைவிட்டு மளிகை பொருள்களை மாதத்திற்கு ஒருமுறையும், காய்கறிகளை வாரத்திற்கு ஒருமுறை வாங்கும் பழக்கத்திற்கு கொரோனா தொற்றுமுடியும்வரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu