அரியலூரில் ஜாமின் பெறாமலே, சிறையில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்ட அதிசயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளைசிறையில் ஜாமின் பெறாமல், விடுவிக்கப்பட்ட கைதிகள், மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் வீடுகளிலும், காடுகளிலும், கடைகளிலும் அடுப்பை போட்டு போட்டிபோட்டிக் கொண்டு காய்ச்ச தொடங்கினர்.
இதனையடுத்து அதிரடியில் இறங்கிய போலிசார் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 50க்கும்மேற்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட 27பேர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் மொத்தம் 22 பேருக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. அதில் ஒரு கோப்பில் ஐந்து பேர் உள்ளடக்கி அதில் ராபர்ட், பாலகுமார் என்பவர் நீங்கலாக மீதமுள்ள மூன்று பேரை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தது.
பொதுவாக ஜாமினில் விடுவிக்க அவர்கள் பெயர்கள் மட்டும் உள்ளடக்கி கோப்புகள் வருவது வழக்கம், ஆனால் ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால் ராபர்ட் மற்றும் பாலகுமாரை சேர்த்து மொத்தம் 24 பேரை கடந்த 12ம்தேதி ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து அரசு வழக்கறிஞர் மூலம் ராபர்ட் மற்றும் பாலகுமார் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை என்ற விபரம் ஜெயல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் மற்றும் பாலகுமார் ஆகிய இருவரையும் மீன்டும் கிளைச்சிறைக்கு கொண்டுவரும் பணியில் ரகசியமாக ஜெயில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த இருவரும் தங்களது கிராமத்திற்கு வராமல் மாற்று இடத்தில் தலைமறைவாகியிருந்தனர். ஜெயங்கொண்டம் கிளை சிறை சூப்பிரண்டு நடராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி
அரியலூர் அருகே உள்ள வி.கைகாட்டியில் வைத்து ராபர்ட், பாலகுமார் ஆகிய கைதிகள் இருவரையும் பிடித்து அரியலூர் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu