தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19 சிகிச்சை மையம் கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரி வளாகத்தில் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட் தொற்றாளர்களுக்கு இம்மையத்தில் ஏற்படுத்துப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். jஇந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
இம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசூர குடிநீர், சிற்றுண்டி, உடல் தேற்றி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவைகள் சித்த மருத்துவர்கள் மற்றும் அலோபதி மருத்துவர்கள் மூலமாக சிகிச்சைகளுடன் கொரோனா நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளும் அளிக்கப்படவுள்ளன.
மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை குணப்படுத்துவதில் ஆரோக்கியமான உணவு மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளதால், மருத்துவர்களின் வழிக்காட்டுதலின்படி ஆரோக்கியமான சரிவிகித உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.
இந்ந ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்த் (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu