விபத்தில் காயமடைந்த அரியலூர் எஸ்.பி. அலுவலக இளநிலை உதவியாளர் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த அரியலூர் எஸ்.பி. அலுவலக இளநிலை உதவியாளர் உயிரிழப்பு
X
அரியலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஜெயங்கொண்டம் வேலாயுதநகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் அலெக்சாண்டர்(46). இவர் அரியலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அலுவலகத்துக்கு பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, உடையார்பாளையம் அடுத்த இடையார் பிரிவு சாலையின் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அலெக்ஸாண்டர், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!