அரியலூர்: 205 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர்: 205 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
X
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் நடந்த முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 205 பயனாளிகளுக்கு 32லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் ஓய்திவூதியம் மற்றும் இதர ஓய்வூதித்தொகைக்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு ரூ.3,37,500/- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகைகளையும், 73 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளும், 14 பயனாளிகளுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டில் நத்தம் மனைப் பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24,432/- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,66,995/- மதிப்பீட்டில் சோளார் மின் மோட்டார் கருவியும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.52,500/- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.36,490/- மதிப்பீட்டில் விலையில்லா உதவி உபகரணங்களையும் என மொத்தம் 205 பயனாளிகளுக்கு ரூ.32,29,917/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், மகளிர் திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வித் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசின் துறைகளின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு திட்ட விளக்க உரையாற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டார்.

இம்முகாமில், இணை இயக்குநர்கள் பழனிசாமி (வேளாண்), ஹமீதுஅலி (கால்நடை), வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம், வட்டாட்சியர் க.மு.கண்ணன், ஊராட்சி மன்றத்தலைவர் கோகிலாகாமராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!