ஜெயங்கொண்டம் அருகே வெறி நாய் கடித்ததில் 3 ஆடுகள் பலி
ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 3 ஆடுகள் பலி 4 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் அணைக்குடி கிராமத்தில் உமாராணி என்பவர் சுமார் 30 க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஆடுகளை வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு தூங்கி விட்டனர். விடியற்காலை வேலையில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது அப்பகுதியில் உள்ள வெறி நாய் ஆட்டை கடித்து குதறி இருந்தது. ஆண்களை கண்டதும் வெறி நாய் ஓடிவிட்டது. இதில் 1 ஆட்டை முற்றிலும் குதறியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.மேலும் நான்கு ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த வாரத்தில் 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்தில் 3 ஆடுகள் உயிர் இழந்துள்ளன.இதை போன்ற ஆடுகள் இறப்பு தொடர் சம்பவமாக நடந்து வருவதால் வெறி நாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை அளித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu