/* */

நெல்கொள்முதல் நிலையம் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நெல்கொள்முதல் நிலையம்  அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, பாதுகாப்பாக வைக்கப்படாததால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து வீனாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், மழையில் வீணான நெல்லை அரசை கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும்போது அரிசியின் தரமும் குறைந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இன்று முட்டுவாஞ்சேரி நெல்கொள்முதல் நிலையத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான நடைமுறைகளையும் கேட்டறிந்தார். இதனையடுத்து கூடியிருந்த விவசாயிகளிடம் விரைவில் நிரந்தர நெல்பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அமைச்சர் ஆய்வின் போது, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உடனிருந்தார்.




Updated On: 2 July 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...