ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று

ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையராக சுபாஷிணி பணியாற்றி வருகிறார். இவர் ஊரடங்கு காலத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் தமிழக அரசின் விதிமுறைகளை மீறிய மளிகை கடைகள், இறைச்சி கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தார்.

இந்நிலையில் வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி என்பது இன்று வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் . சுபாஷினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் அதிகாரிகள் வைரஸ் பரிசோதனை செய்துகொண்டு கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.பல்வேறு பணி நிமித்தமாக நகராட்சி ஆணையரை சந்தித்த பொதுமக்கள், வணிகர்கள், நகராட்சி ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story