ஜெயங்கொண்டம் தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

ஜெயங்கொண்டம் தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  எம்எல்ஏ ஆய்வு
X

தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

ஜெயங்கொண்டம் தொகுதி தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் இன்று தா.பழூர் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பொது சுகாதார பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம் மேற்கொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள். மருந்துகள் கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போதுமான அளிவிற்கு உள்ளனரா,

தடுப்பூசிகள் போடப்படும் இடங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையின் வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு மேற்கொண்டார். வட்டார தலைமை மருத்துவர் டாக்டர்.புகழேந்தி,டாக்டர்.சுகந்தன்,டாக்டர்.மாலதிகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் செல்தில்குமார், அகிலா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்