அரியலூர்: ஜெயங்கொண்ட த்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர்: ஜெயங்கொண்ட த்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய ஆகஸ்ட்9ம்தேதி இந்தியாவை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ,மத்திய அரசு இந்திய பொதுச் சொத்துகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படுவதைக் கண்டித்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று இந்தியாவை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டனர்.

மக்கள் விரோத வேளாண் சட்டங்களையும் மின்சார சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். வேலை இழப்பினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஆட்குறைப்பு, சம்பளம் வெட்டு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

வருமான வரி கட்டாத போதிய வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகப்படுத்தி வேலை நாட்களை அதிகப்படுத்தி, ஊதியத்தை உயர்த்தி நகர்ப்புறங்களுக்கு இத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!