ஜெயங்கொண்டம் தொகுதியில் 152 பேருக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில்  152 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 14 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 57 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 40 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 41 பேரும் சேர்த்து 152 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 878 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1990 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1167 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 991 நபர்களும் சேர்த்து 5026 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!