அரியலூர்: மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி
அரியலூர் மாவட்ட நெட்பால் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போட்டியில் சீனியர் நெட்பால் மகளிர் போட்டியும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நெட்பால் போட்டியும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு அணிகள் சார்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டார்கள்.
14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதலிடம், TSN மெட்ரிக் பள்ளி தளவாய் இரண்டாமிடம், பாத்திமா மெட்ரிக் பள்ளி ஜெயங்கொண்டம், மற்றும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் ஆகியவை மூன்றாமிடத்தை பெற்றனர்.
14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் T S N மெட்ரிக் பள்ளி தளவாய் முதலிடம், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி ஜெயங்கொண்டம் இரண்டாம் இடம், பாத்திமா மெட்ரிக் மேல்நிலை ஜெயங்கொண்டம் மற்றும் என் ஆர் பப்ளிக் பள்ளி உடையார்பாளையம் மூன்றாமிடத்தை பெற்றனர்.
சீனியர் பெண்கள் பிரிவில் பரப்ரம்மம் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடம், மதர் ஞானம்மாள் மகளிர் கல்லூரி இரண்டாமிடம், மதர் ஞானம்மாள் நெட்பால் கிளப் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இப்போட்டியை அரியலூர் மாவட்ட நெட்பால் கழகச் செயலாளர் பாண்டியன் கொடி ஏற்றினார். அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
பரப்ரஹ்மம் கிளப் ஸ் இண்டர்நேஷனல் & ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பரப்ரஹ்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நெட்பால் தேசிய நடுவர்கள் கார்த்திக் ராஜன், ராஜேஷ்,அமுதி, பாலகுரு ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்வர் வரவேற்புரையாற்றினார். அரியலூர்மாவட்ட நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu