அரியலூர் : வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடி மையங்களான ஜெயங்கொண்டம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், வாக்குச்சாவடி மையங்களில் வார்டுகள் விபரம், ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கை, இதுவரை வாக்களித்தவர்கள் விபரம், வாக்குப்பதிவு தொடங்கிய நேரம், வேட்பாளர்களின் முகவர்கள் விபரம், பாதுகாப்பு வசதிகள், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான விபரங்களை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளின்படி தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்கவும் கலெக்டர் ரமண சரஸ்வதி பெ.ரமண சரஸ்வதி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu