அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு

அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு
X

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து இறந்தது.

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழந்தது.

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளது. இக்காட்டுப் பகுதியில் வசித்து வரும் மான்கள், கோடைகாலத்தில் தண்ணீருக்காக ஊருக்குள் நுழைகின்றன.

இந்நிலையில் முந்திரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் நாய்களை வளர்த்து வருகின்றனர். தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் மான்களை இந்நாய்கள் விரட்டி கடிப்பதில் மான்கள் உயிரிழக்கின்றன.

இதுபோன்று நேற்றுஇரவு நான்கு வயதுள்ள ஆண்மான் தண்ணீருக்காக ஊருக்குள் வந்தபோது நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு செனற வனத்துறையினர் குழி தோண்டி மானை புதைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா