அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி, காளைக்கு சிகிச்சை

அரியலூர்: விஷ வண்டிகள் கடித்து பசு பலி,  காளைக்கு சிகிச்சை
X

சிகிச்சை அளிக்கப்படும் காளை.

Ariyalur News Today -அரியலூர் அருகே விஷ வண்டிகள் கடித்து பசுமாடு பலியானது. மேலும், ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Ariyalur News Today -அரியலூர் மாவட்டம் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான மாடுகள் அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் பலத்த காற்றின் காரணமாக பறந்து மேய்ந்துக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை கடித்ததில் கன்று ஈனும் தருவாயில் இருந்த பசுமாடு உயிரிழந்தது.

ஆபத்தான நிலையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விஷ வண்டுகள் பறந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!