ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ-ல் இணையதளம் மூலம் மாணவர் நேரடி சேர்க்கை

ஜெயங்கொண்டம் ஐ.டி.ஐ. பைல் படம்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ-ல் 2022-2023ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் ஒதுக்கீடு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 Debit Card / Credit Card / Net Banking வாயிலாக செலுத்த வேண்டும்.
ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் உள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879, 9499055880 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu