ஜெயங்கொண்டத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை போதை இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தை முன்னெடுத்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, போதைப் பொருள் தடுப்பு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்நிகழ்வு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை வாசிக்க, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், இந்த உறுதிமொழியில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி கலை மற்றம் அறிவியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், சுகாதாரத் துணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சி.சுமதி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu