16 வயது சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலர் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் உடந்தையாகவும், பலாத்காரம் செய்த லாட்ஜ் உரிமையாளர் செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கந்தசாமி (45 )என்பவரை கடந்த ஏப்ரல் 24 ம் தேதியும், இந்த வழக்கில் தொடர்புடைய உரிமையாளருக்கு உடந்தையாக இருந்த லாட்ஜ் மேலாளர் மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் தனவேல் (58) என்பவர் மீது விபச்சாரத் தொழில் குற்றவாளி தடுப்புச் சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தொடர்புடைய நாகமங்கலம் கருப்புசாமி மகன் பாலச்சந்திரன் (23) மற்றும் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டி தெரு முருகேசன் மகன் வினோத்(29) ஆகியோர் மீது பாலியல் குற்றவாளி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்கவும் கடந்த ஏப்ரல் 30-ம் தேதியும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடையார்பாளையம் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா 35 கீழப்பழூர் பால்ராஜ் மனைவி இந்திரா (38) அமிர்தராயக்கோட்டை காலனி தெரு நாகராஜ் மனைவி இந்திரா (40) ஆகிய 3 பேரும் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு திருமானூர் தெற்குத்தெரு மருதமுத்து மகன் தெய்வீகன்(49), கீழப்பழுவூர் சண்முகம் மகன் வெற்றி கண்ணன்(37), வி.கைகாட்டி முத்துவாஞ்சேரி ரோடு செந்தில் மகன் பிரேம் (23) மற்றும் அரியலூர் அண்ணாநகரை சேர்ந்த தேவேந்திரகுமார் மகன் மனோஜ் குமார்(49) ஆகிய 4 பேரும் மொத்தம் ஏழு பேரையும் கடந்த மே இரண்டாம் தேதியும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அரியலூர் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கீழப்பழுவூர் பிரதாப் மகன் ராஜேந்திரன்(62) என்பவரையும் பாலியல் குற்றவாளியாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி மாவட்ட எஸ்.பி .பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரமன சரஸ்வதி ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் மொத்தம் இதுவரை 12 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 16 வயது சிறுமி சமீபத்தில் ஒரு 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்த முயற்சித்து, அதனை பெற்றோர் கண்டுபிடித்து பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். மேலும் அந்த 16 வயது சிறுமியை 13 வயது சிறுமியின் தாயார் செருப்பால் அடித்து சிறுமியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu