ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்குகிறார் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரா.கலைச்செல்வி தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டு குறித்து மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து, முன்னதாக கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி மற்றும் கல்லூரி அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ம.ராசமூர்த்தி வரவேற்றார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் முனைவர் அன்பரசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai and the future work ppts