அணைக்குடம் அய்யனார் கோவில் உண்டியல் உடைப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அணைக்குடம் அய்யனார் கோவில் உண்டியல் உடைப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

உடைக்கப்பட்ட கோவில் உண்டியல்.

ஜெங்கொண்டம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் அய்யனார் கோயில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அதன் அருகே அய்யனார் கோயிலுக்கென்று தனியாக உண்டியல் உள்ளது. இன்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கோயில் பூசாரி மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவிலில் உண்டியல் நீண்டகாலமாக திறக்கப்படாததால் சுமார் 50 ஆயிரம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கோவில் பூசாரி தெரிவித்துள்ளார்.

உண்டியல் வைக்கப்பட்டிருந்த சாலை கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையாகும். மேலும் கோவிலின் எதிர்புறம் நான்கு சாலைகளையும் கணிக்கும் விதமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, உண்டியலில் இருக்கும் இடத்தில் மின்விளக்குகள் இருந்தபோதிலும், துணிச்சலுடன் உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!