காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
X

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் மேற்பார்வையில், ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் 60 பேருக்கு மூன்று நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்ற விபத்துகளில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

2-வது நாளாக உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது தமிழ்நாடு கமாண்டர் பிரிவை சேர்ந்த குழுவினர் இந்த செயல் விளக்க பயிற்சி அளித்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!