ஆண்டிமடத்தில் முன்னாள் மாணவர்கள் இயக்கம் சந்திப்பு நிகழ்ச்சி

ஆண்டிமடத்தில் முன்னாள் மாணவர்கள் இயக்கம் சந்திப்பு நிகழ்ச்சி
X

ஆண்டிமடம் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

ஆண்டிமடம் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன்,இரா.செல்வம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டையில் உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் 50-வது பொன்விழா முன்னாள் மாணவர்கள் இயக்கம் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மற்றும் இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பள்ளி தளாளர் தந்தை பிரான்சிஸ் மாரியன், தலைமை ஆசிரியர் செபாஸ்டின் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!