சிறுமியை கடத்திச் சென்றவரை போக்ஸோவில் கைது செய்த அனைத்து மகளிர் போலீசார்

ஜெயங்கொண்டம் அருகே பலாகாரத்திற்காக சிறுமியை கடத்திச் சென்றவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சி பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் தா பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு திருமணநிகழ்வுக்கு சென்ற மணிகண்டன் 14 வயது சிறுமியை போன் செய்து வரவழைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார். சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது மணிகண்டன் தன்னை தவறாக நடப்பதற்கு கடத்திச் செல்ல முயற்சித்த உள்ளார் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu