ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் நடைபெற்ற ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் சங்க கொடி ஏற்று விழாவும், ஆட்டோ ஸ்டாண்ட் சங்க போர்டு திறப்பு விழாவும் நடைபெற்றது.
ஏஐடியுசி மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாவட்டப் பொதுச் செயலாளருமான தண்டபாணி பங்கேற்று சங்க கொடியை ஏற்றி வைத்தார். உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் ரஞ்சித்குமார்,சங்க பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஆட்டோ ஸ்டாண்ட் கிளை தலைவர் தோழர் கோமல்ராஜ் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். துணைத்தலைவர் ராஜராஜன், செயலாளர் முருகேசன், மோகன், ரஞ்சித்குமார், தங்கையன், முகிலன், பிச்சைபிள்ளை,பீட்டர், கதிரவன், செல்வகுமார், ராஜேந்திரன், மற்றும் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி பேசும் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவேண்டும். மக்கள் ஆட்டோவில் வந்தால்தான் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வருமானம்.அதனை உணர்ந்து ஜனங்கள் முகம் சுழிக்காமல் கட்டணம் உட்பட சுமூகமாக நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆட்டோவுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பயணிகள் பயண கட்டணம் கொஞ்சம் கூடுதலாக்க வேண்டிய நிலையில் மக்கள் ஆட்டோவில் பயணம் செய்ய யோசிக்கிறார்கள்.
இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது இதனை ஈடு செய்ய நிவாரணமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்பட அரசு முன்வர வேண்டும் இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத நபர்களை விசாரிக்காமல் ஆட்டோ பயணத்தில் அனுமதிக்க வேண்டாம். காவல் துறையிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். விரைவில் மாநில ஆட்டோ தொழில்சங்க தலைவர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தண்டபாணி குறிப்பிட்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu