ஜெயங்கொண்டத்தில் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, தேமுதிகவினர்.

ஜெயங்கொண்டத்தில் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, தேமுதிகவினர்.
X

ஜெயங்கொண்டம் நகர திமுக ஏற்பாட்டில் அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஜெயங்கொண்டம் நகர திமுக ஏற்பாட்டில் அதிமுக, தேமுதிகவில் இருந்து விலகி அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில்இணைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அதிமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 52பேர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் கட்சி ஆடை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். உடன் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், நகர திமுக செயலாளர் வெ.கொ.கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!