ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி

ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி
X
ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தில்  விவசாய பொருட்காட்சி நடந்தது.
ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்துறை சார்பில் சுத்தமல்லி கிராமத்தில் விவசாயிகள் விழா மற்றும் விவசாய பொருட்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முதல்வர் சுந்தர வரதராஜன் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி ஆகியோர் விவசாயக் பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.


பொருட்காட்சியில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது விவசாயிகளை வெகுவாக கவர்ந்தது.நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture