கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம் நடத்தும் ஆடி18 சப்பரத் தேர் திருவிழா

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம் நடத்தும் ஆடி18 சப்பரத் தேர் திருவிழா
X

சப்பார திருவிழா தொடர்பான போஸ்டர்.

சிறப்பான முதல் தேருக்கு முதல்பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.5,000/- மூன்றாம் பரிசாக ரூ.3.000/- வழங்கப்படுகிறது.

இதுகுறித்தது கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும தலைவர் கோமகன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

03.08.2022 புதன்கிழமை ஆடிப் பெருக்கு எனும் ஆடி மாதம் 18-ம் நாள் என்பது தமிழர் திருநாள் நீரை வணங்கும் தமிழரின் பண்பைப் பறைசாற்றும் விழா. அந்நாளில் தமிழகத்து அனைத்து இடங்களிலும் நீரினை வழிபடும் நிலை இன்றும் உள்ளது. நீரினை பெண்ணாக காவிரித்தாயாக கருதி அதற்கு கருகமணி வளையல் காது ஓலை மஞ்சள், குங்குமம், பூச்சரம் மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசி வைத்து வழிபாடு செய்து அதை நீருக்கு காணிக்கையாக்கி அந்நீர்நிலையில் விடுவது இவ்விழா வழிபாட்டு முறையில் ஒன்று. காவேரி ஓடும் பகுதியிலும் பேரேரிகளிலும் ஊர் குளங்களிலும் இது மிகச் சிறப்பாக நடைபெறும் நிகழ்வு இன்றும் தொடர்கிறது.

இந்நாளில் சிறார்கள் பெருமகிழ்வோடு சப்பரங்கள் செய்து அதை அவரவர் வீட்டிலிருந்து நீர்நிலை வரை இழுத்து சென்று அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர். அந்த சப்பரத்தை செய்வதில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவர். யார் சப்பரம் சிறப்பானது என்பதில் போட்டி போடுவார்கள்.

வளரும் இளம் தலைமுறையின் படைப்பாற்றல் பெருக்கத்தை ஊக்கப்படுத்தும் பண்பு அதில் இருக்கிறது. இன்று அது அருகிவருகிறது. அதை மீளுருவாக்கம் செய்யும் வகையில் சிறார்கள், இளைஞர்களிடம் ஊக்கப்படுத்த சப்பாரத் திருவிழாவை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழுமம் முன்னெடுக்கிறது.

ஆடி பதினெட்டு அன்று சப்பரத்திருவிழா ஓட்டத்தை கங்கைகொண்டசோழபுரத்தில் தொடங்கி அணைக்கரை வரை நடத்துகிறது. இதில் பங்குபெரும் சப்பரங்களுக்கு பரிசுகள் வழங்கி அதில் முதல் மூன்று சப்பரங்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்குகிறது. இது தமிழ்ப் பண்பாட்டு மீளுருவாக்கம். இதை பெருமிதத்தோடு மேற்கொள்வோம்.

இவ்வாண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு 03.08.2022 புதன்கிழமையன்று நிகழ்கிறது. சப்பரத்திருவிழாவில் கலந்துகொள்வோருக்கு பரிசும், அதில் சிறப்பான முதல் தேருக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.5,000/- மூன்றாம் பரிசாக ரூ.3.000/- வழங்கப்படுகிறது. இவ்விழாவில் தமிழ்பெருமிதத்தோடு கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

தமிழ்தாய் படம் தாங்கிய சப்பாரத்தேரோட்டம் கங்கைகொண்டசோழீஸ்வரர் பெரியகோவில் கீழவீதியிலிருந்து காலை 8.00 மணியளவில் புறப்பட்டு அணைக்கரை வந்தடையுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் தமிழ்பெருமிதத்தோடு கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story