ஆடி முதல் வெள்ளி: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த பெண்கள்

ஆடி முதல் வெள்ளி: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த பெண்கள்
X

ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு  பெண்கள் தில்லை காளியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

ஆடி முதல் வெள்ளியையொட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வேலாயுதம் நகரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தில்லை காளியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அபிஷேகம் செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தை கண்டு களித்து அம்மனின் பிரசாதத்தைப் பெற்று வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!