அரியலூர் அருகே நடந்த சாலை விபத்தில் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு

அரியலூர் அருகே நடந்த சாலை விபத்தில் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

விபத்து ஏற்படுத்திய டூரிஸ்ட் வேன்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கீழவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் இன்று தத்தனூர் பொட்ட கொல்லையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவம் பார்த்துவிட்டு மீண்டும் தத்தனூர் மேலூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் டூவீலரை திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு பின்னால் வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்தது. டூவீலரில் மேலும் அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயற்சித்தும் முடியாத சூழலில் வேன் டூவிலரில் மோதி டூவீலரில் வந்த தட்சிணாமூர்த்தி மீது சாய்ந்தது. இதில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் வேனில் பயணித்த கடலூர் மாவட்டம் சின்னவடவாடி, மற்றும் ஆதிச்சகுடி பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காது வழியாக ரத்தம் வந்த அரவிந்த் உட்பட நான்கு பேர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அந்த வேனில் வந்தவர்கள் கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தில் இருந்து அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு செல்வதற்காக திரும்பியபோது தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

விபத்தினால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.மேலும் போலீசார் இறந்து போன தட்சிணாமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil