15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

போக்சோவில் கைதான அஜித்குமார்.

15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார் வயது (21). இவர் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்தி சென்றார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்தார்.

விசாரணையில் அவர்கள் சென்னையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஜித்குமார் மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது சிறுமியிடம் அஜித்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!