அரியலூர் மாவட்டத்தில் 20 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி

அரியலூர் மாவட்டத்தில் 20 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி
X

அரியலூர் மாவட்டம் உதய நத்தத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Today Live Match Kabaddi - அரியலூர் மாவட்டம் உதய நத்தத்தில் 20 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Today Live Match Kabaddi -அரியலூர் மாவட்டம்-உதயநத்தம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அமெச்சூர் கபடி கழக மாவட்ட தலைவர் எம்.ஆர்.இரகுநாதன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டி தொடரில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம் ,புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு அணிகள் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டு விளையாடினர்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் அரியலூர் வெண்ணங்குழி அணியும், உதயநத்தம் அணியும் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் உதயநத்தம் அணியை வெண்ணங்குழி‌ அணி 30க்கு 22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது.


முதல் இடம் பெற்ற வெண்ணங்குழி அணிக்கு ரூ.30,022/ம், இரண்டாம் பரிசு பெற்ற உதயநத்தம் அணிக்கு ரூ.25,022 ம், மூன்றாம் பரிசு பெற்ற கோட்டியால் அணிக்கு ரூ.20,022ம், நான்காம் பரிசு பெற்ற கடலூர் அணிக்கு ரூ.15,022 ம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டதுடன் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு