ஜெயங்கொண்டம் அருகே போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜெயங்கொண்டம் அருகே போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான வினோத்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி , மேலும் சிறுமியின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (27) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். சிறுமி குழந்தைகள் உதவி எண்: 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறையினர் வினோத்தை 20.10.2021 அன்று போக்சோவில் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வினோத்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத்குமாரிடம் போலீசார் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!