அரியலூர்: தா.பழூர் அருகே மின்கம்பியில் உரசிய பெண் மயில் உயிரிழப்பு

அரியலூர்: தா.பழூர் அருகே  மின்கம்பியில் உரசிய பெண் மயில் உயிரிழப்பு
X

காரைக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில்.

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி காளியம்மன் கோவில் அருகில் இரை தேடி வந்த மயில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமப் பகுதியில் இரை தேடி அதிக அளவில் மயில்கள் வந்து செல்கின்றன. அங்கு உள்ள வயல் வெளிப் பகுதியில் இரை தேடி பறக்க முயற்சித்த பெண் மயில் ஒன்று அங்குள்ள விவசாய மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பியில் அதன் இறக்கைகள் உரசியது. இதில் மின்சாரம் தாக்கப்பட்டு அந்த மயிலானது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தா.பழூர் காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future