ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு நிறைவு

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு நிறைவு
X

வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படுகிறது

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுவாக்குப்பதிவில் 947 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 57.15 சதவீத வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேட்சை வேட்பாளர் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மறைதிருக்கி (ஸ்பேனர்)-க்கு பதிலாக திருகுஆணி (ஸ்குரு) என தவறுதலாக பதியப்பட்டு நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் விஜயலெட்சுமி தேர்தல் ஆணையத்திற்கு புகார்மனு அளித்தார்.

இதன்பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடத்த ஆணையிட்டது.

இந்த மறு வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16வது வார்டில் உள்ள 800 ஆண்வாக்காளர்கள் மற்றும் 857 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1657 வாக்காளர்களில், 5 மணி வரை 458 ஆண் வாக்காளர்கள் மற்றும் 489 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 947 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 57.15 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story