அரியலூர்: 52 வயது மனைவியை காணோம்- கணவர் போலீஸ் நிலையத்தில் புகார்

அரியலூர்: 52 வயது மனைவியை காணோம்- கணவர் போலீஸ் நிலையத்தில் புகார்
X

தா. பழூர் காவல் நிலையம் (பைல் படம்)

52 வயது மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் அளித்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் கரும்பாயிரம் (60). இவரது மனைவி வளர்மதி (52) என்பவர் கடந்த 11 ஆம் தேதி மாலை 2 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கரும்பாயிரத்திடம் கூறி சென்றுள்ளார். இதுநாள் வரை வீட்டிற்கு திரும்பி வளர்மதி வரவில்லை.

இது குறித்து அவர் அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!