ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 5 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 5 பேர் கைது
X

பெற்ற குழந்தையை விற்ற சரவணன் -மீனா தம்பதியினர்


ஜெயங்கொண்டம்அருகே பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தாய்- தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவுி மீனா. இந்த தம்பதியினருக்கு சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ உள்ளிட்ட நான்கு மகள்கள் உள்ளனர்.

சுபஸ்ரீ பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், சுபஸ்ரீ யின் தந்தை சரவணன், அந்த குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம், கோயமுத்தூரில் உள்ள ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர், வடவீக்கம் கிராமத்தில் குழந்தையை விற்ற தம்பதிகள் குறித்து விசாரணையை துவக்கினர். விசாரணையில் இவர்களது வீட்டிற்கு கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் சரவணன்- மீனா தம்பதியினரிடம் விசாரித்தபோது, நான்காவது குழந்தையை விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டனர். கோயமுத்தூரில் இருந்து 3 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சரவணன் -மீனா தம்பதியினர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!