அரியலூர் அருகே வடிகால் வசதி இல்லாததால் 40 ஏக்கர் விளை நிலம் பாதிப்பு

அரியலூர் அருகே வடிகால் வசதி இல்லாததால் 40 ஏக்கர் விளை நிலம் பாதிப்பு
X
அரியலூர் அருகே மூர்த்தியான் கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
அரியலூர் அருகே மூர்த்தியான் கிராமத்தில் தண்ணீர் வெளியேற நிரந்தர வடிகால் வசதி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தில் சூரக்குழி என்ற குளம் உள்ளது. இதனை சுற்றி உள்ள விவசாய நிலத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்த கனமழை காரணமாக மூர்த்தியான் கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்ததால். விலை நிலங்களில் சாகுபடி செய்துள்ள நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளம் நிரம்பி தண்ணீர் சாலையில் வழிந்து ஓடி வருகிறது.

தண்ணீர் வரத்து அதிகமானால் ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குளத்தில் தண்ணீர் அதிகரித்து வருவதால் தண்ணீர் வெளியேற சரியான முறையில் நிரந்தர வடிகால் வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story