ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி: தீபாவளி நாளில் சோகம்

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி: தீபாவளி நாளில் சோகம்
X
தீபாவளியன்று, ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மாமியார் வீடான மறுகாலங்குறிச்சி கிராமத்திற்கு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மகள் மற்றும் தம்பி மகன் லோகேஷ் ஆகியோர்களை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இரண்டு குழந்தைகளும், மறுகாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் வந்துள்ளனர். அப்போது, குளத்திற்கு அருகில் லோகேஷ் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த ஹரிணியும், லோகேஷை காப்பாற்ற எண்ணி, குளத்தில் இறங்கினார்.

இதில் இருவரும் நீரில் மூழ்கினர். இருவரும் கரை திரும்பாததால் அருகில் இருந்த சிறுவர்கள், கூச்சலிட்டு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்று திரண்டு இரண்டு குழந்தைகளையும் தேடி கண்டுபிடித்தனர். குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிந்தனர். உடற்கூறு ஆய்வுக்காக குழந்தைகளின் உடலை கேட்டபோது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தர மறுத்தனர். அவர்களுடன் ஜெயங்கொண்டம் போலீசார் பேச்சு நடத்தினர். இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture