100 நாள் பணி புறக்கணிப்பு: பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
![100 நாள் பணி புறக்கணிப்பு: பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் 100 நாள் பணி புறக்கணிப்பு: பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/08/19/1251638-screenshot20210819-144813vlc.webp)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலையை புறக்கணித்து பொதுமக்கள் பாேராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்லும் பாதையில் உள்ள இரண்டு ஓடைகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
55 நபர்கள் உயிரை பணயம் வைத்து இரண்டு ஓடையை கடந்து பணிக்கு செல்ல வேண்டி இருப்பதால் வயதானவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் தண்ணீரில் நடத்து வேலைக்கு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அண்ணங்காரன்பேட்டை பொதுமக்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்களது 100 நாள் வேலை அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu